மதுரையில் மரத்தில் ஏறி கொக்கு பிடிப்பதில் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்தது : 2 இளைஞர்கள் கைது

Jun 23 2022 6:41PM
எழுத்தின் அளவு: அ + அ -

மதுரை அலங்காநல்லூர் அருகே, மரத்தில் ஏறி கொக்கு பிடிப்பதில் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்தது. இதுதொடர்பாக இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

மதுரை மாவட்டம் மேலூர், கொட்டகுடியை சேர்ந்த டிவி மெக்‍கானிக்‍கான ராமமூர்த்தி, அலங்காநல்லூர் அருகே அழகாபுரி கிராமத்தில் வசித்துவரும் தனது உறவினரான முத்துசெல்வி வீட்டிற்குச் சென்றுள்ளார். முத்துசெல்வி வீட்டின் முன்பாக உள்ள மரத்தில், சில இளைஞர்கள் கொக்கு பிடிக்க வந்தனர். அதனை பார்த்த ராம்மூர்த்தி, வீட்டில் பெண் பிள்ளைகள் இருப்பதால் இங்கு வந்து கொக்கு பிடிக்கக்‍ கூடாது என கண்டித்துள்ளார். அப்போது இளைஞர்களுக்கும், ராமமூர்த்திக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் கலைந்து சென்ற இளைஞர்கள், தனது நண்பர்களை அழைத்து வந்து ராமமூர்த்தி மற்றும் முத்துசெல்வியிடம் தகராறு செய்தனர். இதையடுத்து, ராமமூர்த்தியை அந்த இளைஞர்கள், கிரிக்கெட் பேட்டால் தாக்கியுள்ளனர். இதில் ராமமூர்த்தி உயிரிழந்தார். சம்பவம் குறித்து போலீசார் வழக்‍குப்பதிவு செய்து, அழகாபுரியை சேர்ந்த அன்பில் பொய்யாமொழி, சிந்தனை செழியன் ஆகியோரை கைது செய்தனர். இருவர் மீதும் கஞ்சா விற்பது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00