ராசிபுரம் அருகே சமூக வலைதளத்தில் சிறுமியின் புகைப்படத்தை ஆபாசமாக பதிவிட்ட இளைஞர் போக்‍சோவில் கைது

Jun 23 2022 5:56PM
எழுத்தின் அளவு: அ + அ -

நாமக்‍கல் மாவட்டம் ராசிபுரம் அருகே, சமூக வலைதளத்தில் சிறுமியின் புகைப்படத்தை ஆபாசமாக பதிவிட்ட இளைஞர், போக்‍சோவில் கைது செய்யப்பட்டார்.

ராசிபுரத்தை அடுத்துள்ள ஆர்.புதுப்பாளையத்தைச் சேர்ந்த மதியழகன் என்பவரின் மகன் அஜித், கணினி பொறியியல் படித்துவிட்டு, நாமக்கல்லில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியுடன், கடந்த சில ஆண்டுகளாக பழக்கம் இருந்துள்ளது. சிறுமி, தனது வீட்டில் இருந்தபோது, அவரது சில புகைப்படங்களை அஜித் தனது செல்போனில் படம்பிடித்து, சிறுமியிடம் காட்டி மிரட்டியுள்ளார். மேலும், சிறுமியின் ஆபாச புகைப்படங்களையும் அவர் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இதையறிந்த சிறுமியின் தாயார், ராசிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, சிறுமியின் புகைப்படத்தை ஆபாசமாக சமூக வலைதளத்தில் வெளியிட்ட அஜித்தை போக்‍சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். பின்னர் ராசிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00