திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தற்கொலைக்‍கு முயன்ற விவசாயக்‍ குடும்பத்தினர்

Jun 23 2022 5:50PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருச்சி மாவட்டம் லால்குடியில், பொதுப்பாதையை அடைத்து மதில் சுவர் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தி.மு.க. ஊராட்சித்தலைவர் மிரட்டல் காரணமாகவும், ஆட்சியர் அலுவலகத்தில் விவசாய குடும்பத்தினர் தற்கொலைக்‍கு முயன்றனர்.

லால்குடி, கூடலூர் வட்டம் மேலத்தெருவில் திரு.சிவனேசன் என்பவர் உட்பட 6 குடும்பத்தினர் வீடு கட்டியும், பட்டி அமைத்து கால்நடைகளை அடைத்தும் வசித்து வருகின்றனர். இவர்கள், நீண்டகாலமாக பயன்படுத்திவந்த பொதுப்பாதையினை திமுக ஊராட்சித்தலைவர் முருகவேல் மற்றும் திமுகவைச் சேர்ந்த பிச்சைபிள்ளை ஆகியோரது தூண்டுதலின்பேரில், அரசு மேல்நிலைபள்ளி நிர்வாகத்தினரை கொண்டு மதில்சுவர் அமைக்கப்பட்டு வருகிறது. இதனை எதிர்த்து லால்குடி உரிமையியல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்‍கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், சிவனேசன் உள்ளிட்டோர் பயன்படுத்தி வந்த பாதையை அடைத்து, கான்கிரீட் மதில்சுவர் எழுப்பும் பணி நடைபெற்று வருகிறது. இதுகுறித்து வட்டாட்சியர் மற்றும் அதிகாரிகளை சந்தித்து மனு அளித்தும் நடவடிக்‍கை எடுக்‍காததால், மனமுடைந்த சிவனேசன் குடும்பத்தினர், ஆட்சியரிடம் மனு அளிக்‍க வந்தனர். பின்னர் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்‍கு முயன்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00