மயிலாடுதுறையில் நடைபெற்ற கோயில் கும்பாபிஷேகத்தில் பெண்களின் நகைத்திருட்டை கண்காணித்த போலீஸ்
Jun 23 2022 5:48PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மயிலாடுதுறையில் நடைபெற்ற கோயில் கும்பாபிஷேகத்தில், பெண்களின் நகைகள் திருடுபோவதைத் தடுக்கும் வகையில், பெண் போலீசார் அறிவுறுத்தல்களை வழங்கினர்.
மயிலாடுதுறையில் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற கோயில் கும்பாபிஷேகத்தில், மர்ம நபர்கள் நகைகளைத் திருடிச் சென்றனர். இதனால் கும்பாபிஷேக விழாவுக்கு வருகை தரும் பெண்கள், புடவைத்தலைப்பை மூடிக்கொண்டு, நகைகள் வெளியே தெரியாத வகையில் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தினர். மயிலாடுதுறை கூறைநாடு சுந்தரமூர்த்தி பிள்ளையார் கோயில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். அவர்களை புடவை தலைப்பை இழுத்து மூடுங்கள் என்று போலீசார் அறிவுறுத்தினர். மேலும் 2 பெண் போலீசார், தங்கள் கையில் சேஃப்டி பின்னுடன் பெண்களது புடவை தலைப்பை போர்த்தி ஊக்கு மாட்டினர். குற்றவாளிகளை பிடிப்பதை விட்டுவிட்டு போலீசார் இதுபோன்று செயல்படுவதற்கு பெண்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.