இந்தோனேசிய சிறையில் இருந்த கன்னியாகுமரி மீனவர் உயிரிழப்பு : மீனவ கிராம மக்‍கள் திடீர் சாலை மறியல் போராட்டம்

May 21 2022 4:10PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தோனேசிய கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறை வைக்‍கப்பட்டிருந்த மீனவர் உடல்நலக்‍குறைவால் உயிரிழந்தநிலையில் தூத்தூர் கிராம மீனவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூர் மீனவ கிராமத்தை சேர்ந்த 8 மீனவர்கள் அந்தமான் பகுதியில் இருந்து கடந்த மார்ச் 7-ம் தேதி ஆழ்கடலில் மீன் பிடி தொழிலில் ஈடுபட்டு கொண்டிருந்த போது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இந்தோனிசியா கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டனர். இதில் 4 பேர் விடுதலை செய்யப்பட்ட நிலையில், தூத்தூர் பகுதியை சேர்ந்த மரிய ஜெசின் என்ற மீனவர் உடல் நல குறைவு ஏற்பட்டு அங்குள்ள மருத்துவமனையில் போதிய சிகிச்சை கிடைக்காமல் இன்று உயிரிழந்தார். இந்த நான்கு மீனவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்த நிலையில் சிறையில் இருந்த ஒரு மீனவர் உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்‍கள் சாலை மறியல் ​போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00