நெல்லை கல்குவாரி விபத்தில் சிக்கி உயிரிழந்த 6-வது நபரின் உடலை மீட்கும் பணி மீண்டும் தோல்வி
May 21 2022 4:06PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகேயுள்ள அடைமிதிப்பான்குளம் கிராமத்தில் காங்கிரஸ் பிரமுகரான சேம்பர் செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான கல்குவாரியில் பாறைகள் சரிந்து விழுந்த விபத்தில் 6 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். கற்குவியல்களில் இருந்து உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் மற்றொருவரின் உடலை மீட்பதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது. பாறைகளுக்கு வெடிமருந்து வைத்து உடைக்கும் பணி நேற்று நடந்தது. ஆனால் 6-வது நபரின் உடல் கண்டறிய முடியவில்லை. இந்நிலையில், இன்றும் பாறைகளுக்கு வெடிவைத்து உடைக்கும் பணிகள் நடைபெற்றன. ஆனால் இன்றும் உயிரிழந்த நபரின் உடலை மீட்புக் குழுவினரால் கண்டறிய முடியவில்லை. இதனால் மாற்றுத்திட்டம் கொண்டு உடலை மீட்பது குறித்து மீட்புக் குழுவினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.