பரமக்குடியில் குரூப் 2 தேர்வு அறைக்கு செல்போன் எடுத்துச்சென்ற நபர் வெளியேற்றம்
May 21 2022 3:56PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் குரூப் 2 தேர்வு எழுதும் அறைக்கு செல்போன் எடுத்துச்சென்ற நபரை அதிகாரிகள் வெளியேற்றினர்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் உள்ள கவுரவ உயர்நிலைப் பள்ளியில் 84 பேர் டி.என்.பி.எஸ்.சி. தேர்வை எழுதினர். அங்கு மாவட்ட ஆட்சியர் சங்கர்லால் குமாவத் நேரில் ஆய்வு மேற்கொண்டபோது ப்ளூடூத் டிவைஸ் ஆனில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 5 அறைகளில் தேர்வெழுதிய அனைவரையும் சேதனை செய்த நிலையிலை, ப்ளூடூத் டிவைஸ் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதேபோல் பரமக்குடி சௌராஷ்ட்ரா மேல்நிலைப் பள்ளியில் தேர்வு மையத்திற்கு சங்கர் என்பவர் செல்போனை மறைத்து எடுத்துச்சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, தேர்வு அறையில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டார். மேலும் வேறு ஏதேனும் குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டாரா? என்பது குறித்து போலீஸார் விசாரணை செய்தனர்.