பெரம்பலூரில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு எழுதிய கர்ப்பிணிக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதி
May 21 2022 3:51PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பெரம்பலூரில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு எழுதிய பெண் ஒருவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டதால் தலைமை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தமிழகம் முழுவதும் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு இன்று நடைபெற்றது. பெரம்பலூர் புதிய காலனி துறைமங்கலத்தைச் சேர்ந்த அனிதா என்பவர் இன்று காலை டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு எழுதி கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து தேர்வு கூட கண்காணிப்பு அதிகாரிகள் மூலம் 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.