தூத்துக்‍குடி ஸ்டெர்லைட் துப்பாக்‍கிச்சூடு சம்பவத்தின் 4-ம் ஆண்டு நினைவு தினம் நாளை அனுசரிப்பு - வெளிமாவட்டத்தினர் கலந்துகொள்ள காவல்துறை தடை

May 21 2022 3:04PM
எழுத்தின் அளவு: அ + அ -

தூத்துக்‍குடியில் ஸ்டெர்லைட் துப்பாக்‍கிச்சூடு சம்பவத்தின் 4-ம் ஆண்டு நினைவுதினம் நாளை அனுசரிக்‍கப்படுகிறது. இதில் வெளிமாவட்டத்தினர் பங்கேற்க காவல்துறை தடை விதித்துள்ளது.

தூத்துக்குடியில் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018-ஆம் ஆண்டு, பொதுமக்கள் தன்னெழுச்சி போராட்டம் நடத்தினர். அப்போது போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் பலியாகினர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தின் நான்காம் ஆண்டு நினைவஞ்சலி நாளை அனுசரிக்‍கப்படுகிறது. அசம்பாவிதங்களைத் தவிர்க்‍கும் வகையில், காவல்துறையினர் முன்னெச்சரிக்‍கை நடவடிக்‍கைகளை மேற்கொண்டுள்ளனர்.

நாளை நடைபெறும் அஞ்சலி நிகழ்ச்சிகளில், வெளிமாவட்டங்களில் இருந்து யாரும் கலந்து கொள்ளக் கூடாது என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பாலாஜி சரவணன்​தெரிவித்துள்ளார். நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் மதுரையைச் சேர்ந்த 2 ஆயிரத்து 500 போலீசார், மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். வெளிமாவட்டத்தினர் வருவதை தடுக்கும் வகையில், மாவட்டம் முழுவதும் 12 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00