மேட்டூர் அணை வரும் 24-ம் தேதி திறப்பு - குறுவை சாகுபடிக்காக முன்கூட்டியே திறக்கப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு
May 21 2022 2:58PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து வரும் 24-ம் தேதி தண்ணீர் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக மேட்டூர் அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் அணையின் நீர்மட்டம் 115.66 அடியாக உயர்ந்துள்ளது. இதனிடையே, குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து முன்கூட்டியே தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அணையை முன்கூட்டியே திறக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன்படி, குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து வரும் 24-ம் தேதி தண்ணீர் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. டெல்டா பாசனத்திற்காக வழக்கமாக ஜுன் மாதம் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்படும் நிலையில், அணையின் நீர்மட்டம் 115 அடியை எட்டியதால், 19 நாட்களுக்கு முன்பே மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படவுள்ளது. மேலும் மே மாதத்தில் மேட்டூர் அணை திறக்கப்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.