குளித்தலை அரசு நடுநிலை பள்ளியில் போதிய கட்டட வசதி இல்லாததால் பரிதவிப்பு : திருமண மண்டபத்தில் மாணவர்கள் பயின்று தேர்வெழுதும் அவலநிலை
May 13 2022 4:49PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கரூர் மாவட்டம் குளித்தலை அரசு நடுநிலை பள்ளியில் பயிலும் மாணவர்கள், அங்கு போதிய கட்டட வசதி இல்லாததால், திருமண மண்டபத்தில் பயின்று, தேர்வெழுதும் அவலநிலை காணப்படுகிறது.
குளித்தலையில் செயல்படும் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில், 1 முதல் 8ஆம் வகுப்பு வரை, 600க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள், தமிழ் மற்றும் ஆங்கில வழியில் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் உள்ள ஒரு பழைய கட்டடம் சேதம் அடைந்ததால், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இடிக்கப்பட்டது. இதனால், மாணவ -மாணவிகள், காலை, மாலை என இருசுழற்சி முறையில் பள்ளியில் பயின்று வந்தனர். தற்போது தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில், போதிய இடவசதி இல்லாததால், 1 முதல் 3ஆம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகள், அருகில் உள்ள திருமண மண்டபத்தில் பயின்று, தேர்வெழுதி வருகின்றனர். சுபமுகூர்த்த நாட்களில், அருகிலுள்ள கோயிலில், வகுப்புகள் நடைபெற்று வந்தன. எனவே, மாணவர்களின் நலன் கருதி, உடனடியாக கட்டிடம் கட்டித்தர வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.