தென்னிந்திய அளவிலான உடல் கட்டழகு மற்றும் உடல் கட்டமைப்பு போட்டியில் தங்கம் வென்ற சாதனைப் பெண் சங்கீதாவுக்கு புரட்சித்தாய் சின்னம்மா வாழ்த்து

Jan 18 2022 5:36PM
எழுத்தின் அளவு: அ + அ -
தென்னிந்திய அளவிலான உடல் கட்டழகு மற்றும் உடல் கட்டமைப்பு போட்டியில் தங்கம் வென்ற சாதனைப் பெண் சங்கீதாவுக்கு, புரட்சித்தாய் சின்னம்மா நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

புரட்சித்தாய் சின்னம்மா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், திருப்பத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த சங்கீதா என்ற பெண், அண்மையில் தென்காசியில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான உடல் கட்டழகு மற்றும் உடல் கட்டமைப்பு போட்டியில் கலந்து கொண்டு, தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார் என்ற செய்தியைக் கேட்டு மிகவும் பெருமையாக இருந்தது என குறிப்பிட்டுள்ளார். சாதனைப் பெண் திருமதி.சங்கீதாவுக்கு தனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

தன் கணவர் உயிரிழந்த நிலையிலும், தனியார் தோல் தொழிற்சாலையில் வேலை பார்த்துக் கொண்டு, தனது இரு பிள்ளைகளையும் கஷ்டப்பட்டு படிக்க வைத்து காப்பாற்றியும், வாழ்வில் போராடிக் கொண்டிருக்கும், இந்த நிலையிலும், தனது விடா முயற்சியாலும் கடின உழைப்பாலும், ஆண்களுக்கு நிகராக உடல் கட்டமைப்பு பயிற்சியை மேற்கொண்டு, இன்று சாதித்து காட்டியிருக்கும் சிங்கப்பெண் சங்கீதாவுக்கு தன் மனப்பூர்வமான ஆசிர்வாதங்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதேபோன்று சாதனையாளர் சங்கீதாவுக்கு இலவசமாக பயிற்சி அளித்து உதவிய பயிற்சியாளர், சகோதரர் குமரவேலுக்கும் தன் இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

சங்கீதாவைப் போன்று இன்னும் எத்தனையோ பெண்கள் தங்கள் வாழ்வில் போராடிக் கொண்டு இருப்பீர்கள். நீங்கள் எந்த துறையானாலும் சரி, எப்படிப்பட்ட நிலையில் இருந்தாலும் சரி, தைரியமாகவும் விடா முயற்சியோடும் எந்தவொரு செயலை செய்யும்போதும், அதில் கண்டிப்பாக வெற்றி பெற்று சாதித்து காட்ட முடியும் என்று அன்போடு தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். சாதனைப் பெண் சங்கீதா தொடர்ந்து பயிற்சிகளை மேற்கொண்டு உயரிய விருதுகளைப் பெற்று நீண்ட ஆயுளோடும், நல்ல சுகத்தோடும் என்றென்றும் மகிழ்ச்சியோடு வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல ஆண்டவனை பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00