நீலகிரி மாவட்டம் மசினகுடியில் பொதுமக்‍களை அச்சுறுத்தி வந்த T-23 புலி பிடிபட்டது - மயக்‍க ஊசி போட்டு வனத்துறையினர் பிடித்தனர்

Oct 15 2021 3:36PM
எழுத்தின் அளவு: அ + அ -
நீலகிரி மாவட்டம் மசினகுடி அருகே சுற்றித்திரிந்த T23 புலி, 21 நாட்கள் தேடுதல் வேட்டைக்குப் பிறகு பிடிபட்டது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் மசினகுடி பகுதிகளில் மனிதர்கள் நான்கு பேரையும், 50-க்கும் மேற்பட்ட கால்நடைகளையும் கொன்ற T23 புலியின் மீது நேற்று மயக்க ஊசி செலுத்தப்பட்ட நிலையில், அடர்ந்த புதருக்குள் பதுங்கிச் சென்றது. நேற்று போதிய வெளிச்சமின்மை காரணமாக தேடுதல் வேட்டை முடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, புலியின் நடமாட்டம் குறித்து தானியங்கி கேமராக்களை ஆய்வு செய்தபோது, போஸ்பரா வனப் பகுதியிலிருந்து இடம் பெயர்ந்து நம்பிகுன்னு வனப் பகுதியில் நடமாடி வருவது உறுதி செய்யப்பட்டது. மயக்கநிலையில் வனப்பகுதிக்குள் தப்பிச்சென்ற புலியை, நூற்றுக்கும் மேற்பட்ட வனத்துறையினர் கும்கி யானைகள் உதவியுடன் தேடி கடந்த 21 நாட்களாக தேடி வந்த நிலையில், இன்று பிற்பகல் பிடிபட்டது. நேற்று மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முற்பட்டபோது புலி தப்பியோடிய நிலையில், மீண்டும் இன்று மயக்க ஊசி செலுத்தி T23 புலியை வனத்துறையினர் பிடித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00