தமிழகத்தில் அனைத்து வகை கடைகள், உணவகங்கள் இரவு 11 மணி வரை இயங்க அனுமதிக்‍கப்பட்டுள்ளதற்கு வர்த்தகர்கள் வரவேற்பு

Oct 15 2021 2:58PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகம் முழுவதும் இன்று முதல் அனைத்து வகை கடைகள், உணவகங்கள் இரவு 11 மணி வரை இயங்க அனுமதிக்‍கப்பட்டுள்ளதற்கு வர்த்தகர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக விதிக்‍கப்பட்ட கட்டுப்பாடுகள் தற்போது தளர்த்தப்பட்டு வருகின்றன. அரசு உத்தரவின்பேரில் இன்று முதல் மாநிலம் முழுவதும் அனைத்து வகை கடைகள், உணவகங்கள் இரவு 11 மணி வரை இயங்க அனுமதிக்‍கப்பட்டுள்ளது. இதனை வர்த்தகர்கள் பெரிதும் வரவேற்றுள்ளனர். தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் வருவதால் கடைகளை 11 மணி வரை திறக்க அனுமதி அளித்திருப்பது கூட்ட நெரிசலை தவிர்க்கும் என்றும் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று கடைகாரர்கள், பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

உணவகங்களின் நேரம் இரவு 10 மணி வரை இருந்தததால் பலர் உணவு கிடைக்‍காமல் பாதிக்கப்பட்டதாகவும் தற்போது நேரம் அதிகரித்து இருப்பது வரப்பிரசாதம் என ஹோட்டல் உரிமையாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

இரவு 10 மணிக்குள் மளிகை மற்றும் காய்கறி கடைகள் அடைக்கபட்டதால் வேலைக்கு சென்று வர காலதாமதம் ஏற்படும் சூழலில் வீட்டுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு சிரமம் பட்டதாகவும், தற்போது நேர கட்டுப்பாட்டில் தளர்வு அறிவித்திருப்பது வரவேற்கதக்கது என பொதுமக்‍கள் தெரிவித்தனர். கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை அனைவரும் கடை பிடிக்க வேண்டும் என அவர்கள் கூறினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00