வடமேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்‍கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 6 மணி நேரத்தில் வலுப்பெற்று புயல் சின்னமாக மாறக்கூடும் - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

Sep 25 2021 3:31PM
எழுத்தின் அளவு: அ + அ -
வடமேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்‍கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 6 மணி நேரத்தில் வலுப்பெற்று புயல் சின்னமாக மாறக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கிழக்கு மத்திய வங்கக்கடலில் நேற்று நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று வலுப்பெற்று, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வட மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ளது. இது அடுத்த 6 மணி நேரத்தில் வலுப்பெற்று புயல் சின்னமாக மாறக்கூடும் என்றும், மேற்கு திசையில் நகர்ந்து நாளை மாலை வடக்கு ஆந்திர-தெற்கு ஒடிசா கடற்கரையை விசாகபட்டினம்-கோபால்பூருக்கு இடையே கடக்கக்‍ கூடும் எனவும் வானிலை​மையம் தெரிவித்துள்ளது.

மதுரை, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, கரூர், திருச்சிராப்பள்ளி, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், இன்று இடி-மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் - அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரியாகவும், குறைந்தபட்சம் 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என்றும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் 14 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் நாளை மற்றும் நாளை மறுநாள், பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

கேரளா, லட்சத்தீவு, மாலத்தீவு மற்றும் தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில், பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00