நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை சரமாரியாக வெட்டிய இலங்கை மீனவர்கள் -காயமடைந்த 3 மீனவர்கள் மருத்துவமனையில் அனுமதி

Oct 5 2021 10:00PM
எழுத்தின் அளவு: அ + அ -
நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஆறுகாட்டுத்துறை மீனவர்கள் 3 பேரை, இலங்கை மீனவர்கள் அரிவாளால் சரமாரியாக வெட்டியதில் அவர்கள் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்‍கப்பட்டுள்ளனர்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறை கிராமத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி, அவருடைய மகன்கள் சிவா, சிவக்குமார் ஆகிய 3 பேர் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர். வேதாரண்யம் நடுக்கடலில் நள்ளிரவு 10 மணியளவில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது, மூன்று படகுகளில் வந்த இலங்கை மீனவர்கள், மீனவர்களின் மீன்பிடி வலையை வெட்டியபோது, தடுக்‍க முயன்ற மீனவர் சிவக்குமாரை அரிவாளால் வெட்டியதில் தலையில் பலத்த காயமடைந்தார். மற்ற இரண்டு மீனவர்களை கம்பு கட்டை போன்றவற்றால் தாக்கிவிட்டு, 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 400 கிலோ வலைகள் ஜிபிஎஸ் கருவி உள்ளிட்ட பொருட்களை இலங்கை மீனவர்கள் பறித்துக் கொண்டு, தமிழக மீனவர்களை விரட்டியடித்தனர். காயமடைந்த மீனவர்கள் அதிகாலையில் கரை திரும்பினர். அரிவாளால் வெட்டியதில் படுகாயமடைந்த மீனவர்கள், வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மீனவர்கள் தாக்‍குதல் சம்பவம் குறித்து வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00