செஞ்சி அருகே ஊராட்சி மன்றத் தலைவர் பதவி 13 லட்சம் ரூபாய்க்‍கு ஏலம் - விசாரணைக்‍கு உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தகவல்

Sep 18 2021 5:20PM
எழுத்தின் அளவு: அ + அ -
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே, ஊராட்சி மன்றத் தலைவர் பதவி 13 லட்சம் ரூபாய்க்‍கு ஏலம் விடப்பட்டதைக்‍ கண்டித்து தர்ணா போராட்டம் நடைபெற்றது.

செஞ்சி அருகே பொன்னங்குப்பம் ஊராட்சியில், பொன்னங்குப்பம், துத்திப்பட்டு ஆகிய 2 கிராமங்கள் உள்ளன. துத்திப்பட்டு கிராமத்தில் 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ள நிலையில், பொன்னங்குப்பம் கிராமத்தில் ஆயிரத்து 500 வாக்காளர்கள் மட்டுமே இருப்பதால், ஒவ்வொரு உள்ளாட்சித் தேர்தலிலும் ஊராட்சி மன்ற தலைவர் பதவி, வார்டு உறுப்பினர் பதவி ஆகியவற்றை துத்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஏலம் விட்டு அவர்களே பதவிகளுக்கு வருவது வழக்கமாக இருந்து வருகிறது.

அடுத்த மாதம் 6-ம் தேதி ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு, வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ளது. இந்நிலையில், பொன்னங்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான ஏலத்தை துத்திப்பட்டு கிராம மக்கள் நடத்தி, அதே கிராமத்தைச் சேர்ந்த முனுசாமியின் மனைவி மங்கை என்பவர் 13 லட்சத்திற்கு ஏலம் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவரை ஊராட்சி மன்ற தலைவராக துத்திப்பட்டு கிராம மக்கள் தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கொதிப்படைந்த பொன்னங்குப்பம் கிராம மக்கள், உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிக்க போவதாகக்‍கூறி, ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே, ஊராட்சி மன்றத் தலைவர் பதவி ஏலம் விடப்பட்டது குறித்து விசாரணைக்‍கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00