தேனி மாவட்டத்தில் அ.ம.மு.க.வினர் மீது பொய் வழக்குப்பதிவு - பொதுமக்கள் சாலை மறியல்
Apr 8 2021 7:19PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தேனி மாவட்டம் போடி தொகுதிக்கு உட்பட்ட பெருமாள்கவுண்டன்பட்டியில் ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் குமார் சென்ற வாகனம் தாக்கப்பட்டதாகக்கூறி, அ.ம.மு.க.வினர் மீது பொய் வழக்குப் பதிந்து கைது செய்யப்பட்டுள்ளதைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தாக்குதலுக்கு தி.மு.க.வினர் தான் காரணம் என ரவீந்திரநாத்குமார் குற்றம் சாட்டிய நிலையில், அ.ம.மு.க.வினர் மீது வழக்கு தொடுத்தது ஏன்? என்று கேள்வி எழுப்பிய போடி தொகுதி அ.ம.மு.க வேட்பாளர் திரு.முத்துச்சாமி, ரவீந்திரநாத் உட்பட அ.தி.மு.க.வினர் 11 பேர் மீது ஆதாரத்துடன் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.