அரக்கோணம் அருகே, தேர்தல் முன்விரோதத்தால் ஏற்பட்ட மோதலில் இருவர் பலி - பா.ம.க.வைச் சேர்ந்த 4 பேர் கைது

Apr 8 2021 7:16PM
எழுத்தின் அளவு: அ + அ -
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே, நடைபெற்று முடிந்த தேர்தலில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, இரு தரப்பினருக்‍கு இடையே நிகழ்ந்த மோதலில், 2 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக பா.ம.க.வைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அரக்கோணம் அடுத்த சோகனூர் காலனியில், தேர்தல் முன் விரோதம் காரணமாக இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. அரக்கோணம் அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளர் பழனி என்பவரது மகன் சத்யா தலைமையில் 10 பேர் கொண்ட மர்ம கும்பல், கத்தி மற்றும் அரிவாள் கொண்டு தாக்‍கியதில், அர்ஜுன் மற்றும் சூர்யா என்ற இளைஞர்கள் உயிரிழந்தனர். மேலும், சௌந்தரராஜன், மதன் ஆகிய 2 பேர், படுகாயங்களுடன் திருத்தணி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இதுதொடர்பாக பா.ம.க.வைச் சேர்ந்த 4 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தலைமறைவாகி உள்ள அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளர் பழனி என்பவரது மகன் சத்யாவை போலீசார் தேடி வருகின்றனர்.

இதனிடையே, உயிரிழந்த சூர்யாவுக்‍கு, திருமணமாகி ஒரு மாதமே ஆன நிலையிலும், அர்ஜுனனுக்கு திருமணமாகி 8 மாத கைக்குழந்தையுடன், அவரது மனைவி 4 மாத கர்ப்பிணியாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00