கொரோனா அதிகரிப்பதால் தமிழகத்தில் மீண்டும் அமலுக்‍கு வருகிறது கட்டுப்பாடு - நாளை மறுதினம் முதல், மாவட்ட வணிக வளாகங்களில் சில்லறை விற்பனை கடைகளுக்‍கு அனுமதியில்லை

Apr 8 2021 3:23PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் கொரோனா கட்டுப்பாடுகள் மீண்டும் அமலுக்‍கு வருகின்றன. இதன்படி, வரும் 10ம் தேதியிலிருந்து, மாவட்ட வணிக வளாகங்களில் சில்லறை விற்பனை கடைகளுக்‍கு அனுமதியில்லை என்றும், பேருந்து நின்று கொண்டு பயணம் செய்ய அனுமதியில்லை என்றும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்‍குநாள் அதிகரித்து வருவதால் கட்டுப்பாடுகள் விதிக்‍கப்பட்டுள்ளன. இதன்படி, தமிழகம் முழுவதும் நோய்க்‍ கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகளின்படி எந்தவிதமான தளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்‍கப்படும் என தெரிவிக்‍கப்பட்டுள்ளது. நோய்ப் பரவலை கருத்தில் கொண்டு திருவிழாக்‍கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்‍கு வரும் 10ம் தேதிமுதல் தடை விதிக்‍கப்படுகிறது. கோயம்பேடு வணிக வளாகத்தில் செயல்படும் சில்லரை வியாபார காய்கனி அங்காடிகள் மட்டும் செயல்பட தடை விதிப்பு - அதேபோல், மாவட்டங்களில் உள்ள மொத்த வியாபார காய்கனி வளாகங்களில் சில்லரை வியாபார கடைகளுக்‍கு தடை விதிக்‍கப்படுகிறது. தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள், தனியார் நிறுவனங்கள், அலுவலகங்கள் மற்றும் உணவு விடுதிகளில் பணிபுரியும் பணியாளர்கள், அலுவலர்கள் மற்றும் பொதுமக்‍களின் உடல் வெப்ப நிலை பரிசோதனை செய்யப்படுவதையும், கை சுத்திகரிப்பான் உபயோகப்படுத்துவதையும், முகக்‍கவசம் அணிவதையும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது. ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி தொழிற்சாலைகள் இயங்க அனுமதிக்‍கப்படும் - மாவட்டங்களுக்‍கு இடையேயான அரசு பொது மற்றும் தனியார் பேருந்து மற்றும் பெருநகர சென்னையில் இயக்‍கப்படும் மாநகரப் பேருந்துகளில் உள்ள இருக்‍கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்‍க அனுமதிக்‍கப்படும் - பேருந்துகளில் நின்று கொண்டு பயணம் செய்ய அனுமதியில்லை என்றும் அரசு தெரிவித்துள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00