தமிழகம் முழுவதும் பறக்கும் படையினர் தீவிர சோதனை : உரிய ஆவணங்களின்றி எடுத்து செல்லப்பட்ட ரொக்கம், பொருட்கள் பறிமுதல்

Mar 8 2021 8:07AM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தேர்தல் பறக்‍கும் படையினர் நடத்திய வாகன சோதனைகளில், உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட பல லட்சம் ரூபாய் ரொக்‍கம் பறிமுதல் செய்யப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் கல்வார்பட்டி சோதனைச்சாவடி கரூர் -திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பறக்கும் படை அலுவலர் சரஸ்வதி தலைமையில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து வந்த காரை மறித்து சோதனையிட்டனர். காரில் 13 லட்சத்து 89 ஆயிரம் ரூபாய் பணம் இருந்தது தெரியவந்தது. உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் கைப்பற்றி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் திண்டுக்கல் ரோடு, தாராபுரம் ரோடு, உடுமலை ரோடு ஆகிய ஆறு இடங்களில் போலீஸாரும், தேர்தல் அலுவலர்களும் இணைந்து வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். ஆவணங்கள் இல்லாத பணம், ரொக்கம் ஆகியவற்றை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை சேர்ந்த அபிஷேக் நகை கடை வைத்து நடத்தி வருகிறார். தனது காரில் நாலு கிலோ எடையுள்ள பழைய வெள்ளி கொலுசுகள் மற்றும் 90 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்துடன் சென்னைக்கு சென்றுள்ளார் அப்போது தேர்தல் பறக்கும் படையினர் நிறுத்தி விசாரித்தபோது நகை பணத்திற்கு உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாததால் அவற்றை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00