பாலியல் புகாருக்‍கு ஆளான சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் - வழக்‍கை சி.பி.ஐ.க்‍கு மாற்றக்‍கோரி 10 பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகள் டி.ஜி.பி.யிடம் வலியுறுத்தல்

Mar 4 2021 8:41PM
எழுத்தின் அளவு: அ + அ -
பாலியல் புகாருக்‍கு ஆளான சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்றும், இந்த வழக்‍கை சி.பி.ஐ.க்‍கு மாற்றக்‍கோரியும், 10 பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகள் டி.ஜி.பி. திரு.திரிபாதியிடம் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாதுகாப்புப் பணியிலிருந்த பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில், காவல்துறை சிறப்பு டி.ஜி.பி.யாக இருந்த ராஜேஷ்தாஸ் மீதான வழக்‍கு பதிவுசெய்யப்பட்டு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்‍கை சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி. முத்தரசி விசாரணை நடத்தி வருகிறார். இந்நிலையில் ராஜேஷ் தாஸை கைது செய்யக்‍கோரியும், அவருக்‍கு உடந்தையாக இருப்பவர்கள் மீது நடவடிக்‍கை எடுக்‍க வலியுறுத்தியும், மகளிர் அமைப்புகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், ராஜேஷ்தாஸ் மீது மேலும் 10 பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகள் புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து டி.​ஜி.பி. திரிபாதியிடம் அளித்துள்ள மனுவில் ராஜேஷ் தாஸை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்றும், இந்த வழக்‍கை சி.பி.ஐ.க்‍கு மாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00