வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியது - கரையோரப் பகுதி மக்களுக்கு 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை
Jan 16 2021 11:27AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தேனி மாவட்டம் வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதை அடுத்து, கரையோரப் பகுதி மக்களுக்கு, மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான மூல வைகையாறு, கொட்டகுடி ஆறு ஆகியவற்றில், கடந்த மாதம் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 59 அடியாக இருந்தது. இந்நிலையில், தொடர் மழையால் அணையின் நீர்மட்டம் இன்று 69 அடியாக உயர்ந்தது.
இதையடுத்து கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பொதுப்பணித்துறையினர் சார்பில் 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதனால் வைகை ஆற்றில் குளிக்கவோ, இறங்கவோ, ஆற்றைக் கடக்கவோ வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3 ஆயிரத்து 967 கன அடியாக உள்ளது. குடிநீருக்காக வினாடிக்கு 319 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
அணையில் நீர் இருப்பு 5 ஆயிரத்து 579 மில்லியன் கன அடியாக உள்ளது. நீர்பிடிப்பு பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்து வருவதால், விரைவில் வைகை அணை முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.