தென்மாவட்டங்களில் பெய்துவரும் தொடர் கனமழை : நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த மழைநீர்

Jan 16 2021 10:38AM
எழுத்தின் அளவு: அ + அ -
தென்மாவட்டங்களில் பெய்துவரும் கனமழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகள் மழைநீரில் மிதக்கின்றன. விளைநிலங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.

தமிழக கடலோரப் பகுதியை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் விடாது மழை கொட்டித் தீர்க்கிறது. ஜனவரி மாதத்தில் வரலாறு காணாத வகையில் அடைமழையாக பெய்வதால் முக்கிய அணைகளான பாபநாசம், மணிமுத்தாறு உள்ளிட்ட அணைகள் நிரம்பி உபரிநீர் தாமிரபரணியில் திறக்கப்பட்டது. இதனால் கடந்த 12ம் தேதி முதல் தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு நீடிக்கிறது. தாமிரபரணி ஆற்றின் நெல்லை- பாளையங்கோட்டை இணைக்கும் சுலோச்சனா முதலியார் ஆற்றுப்பாலத்தில் வெள்ளப்பெருக்கை பார்வையிட குவிந்த பொதுமக்கள் செல்போன்களில் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

தூத்துக்குடியில் 30க்கும் மேற்பட்ட பகுதிகள் தீவுகளாக மாறியுள்ளன. முத்தம்மாள் காலனி, ராம் நகர் போன்ற இடங்களில் சுமார் ஆயிரத்து 500 வீடுகளை இடுப்பளவு உயரத்திற்கு மழை நீர் சூழ்ந்துள்ளது. கடந்த 2 நாட்களாக மின்சாரம் இல்லாததால் 200க்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகள் வீடுகளை காலி செய்துள்ளனர். இதனிடையே தேங்கி கிடக்கும் மழை நீரை உடனடியாக அப்புறப்படுத்த வலியுறுத்தி அப்பகுதி மக்கள் எட்டயபுரம் சாலையில் சுமார் 3 மணி நேரம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கடம்பாகுளம் நிரம்பி மறுகால் பாய்ந்ததால் குரும்பூர், அங்கமங்கலம் என சுமார் 2 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட நெல், வாழை பயிர்கள் மழைநீரில் மூழ்கின. இதனால் செய்வதறியாத விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00