கேந்திரிய வித்யாலயாவில் அனைத்து மாநில மொழிகளிலும் கல்வி கற்பிக்‍கப்பட வேண்டும் - சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்‍கிளை உத்தரவு

Nov 27 2020 8:05AM
எழுத்தின் அளவு: அ + அ -
கேந்திரிய வித்யாலயாவில் அனைத்து மாநில மொழிகளிலும் கல்வி கற்பிக்‍கப்பட வேண்டுமென, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்‍கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் மொழியை கட்டாயக்‍ கல்வி மொழியாக ஆக்க வேண்டும் என, மதுரையைச் சேர்ந்த திரு. பொன்குமார் தாக்‍கல் செய்த மனு, நீதிபதிகள் திரு. கிருபாகரன், திரு. புகழேந்தி அமர்வு முன் விசாரணைக்‍கு வந்தது. அப்போது பிரெஞ்ச், ஜெர்மன், பெங்காலி உள்ளிட்ட மொழிகளை கற்கலாம், தமிழ் நாட்டில் தமிழ்மொழியை கற்கக்‍கூடாதா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். தாய் மொழியை ஊக்கப்படுத்த வேண்டும் என பிரதமர் கூறிவரும் நிலையில், இந்தி, ஆங்கிலத்தை மட்டுமே படிக்க வேண்டும் என கட்டாயப் படுத்துகின்றனர் - கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் விருப்ப பாடமாக மட்டும் தமிழ் உள்ளது என்பதை ஏற்க முடியாது என நீதிபதிகள் குறிப்பிட்டனர். தமிழ் மொழிக்காக மட்டும் நாங்கள் கேட்கவில்லை - அனைத்து மாநில மொழிகளுக்கும் சேர்த்து தான் கேட்கிறோம் என தெரிவித்த நீதிபதிகள், இப்படியே சென்றால் வரும் காலங்களில் தமிழ்மொழி தெரிந்திருந்தால் கேந்திரிய வித்யாலாயாவில் இடம் கிடைக்காது என்ற நிலை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறினர். தாய் மொழியில் கல்வி கற்கும் ஜெர்மனி, ஜப்பான், சீனா போன்ற நாடுகள் நல்ல முன்னேற்றத்தில் உள்ளதாக குறிப்பிட்ட நீதிபதிகள், விரிவான உத்தரவுக்‍காக வழக்கு விசாரணையை இன்றைக்‍கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00