தூத்துக்குடியில் 300 கோடி ரூபாய் மதிப்பிலான போதைபொருள், துப்பாக்கிகள் பறிமுதல் - இலங்கையை சேர்ந்த 6 பேர் கைது

Nov 27 2020 8:53AM
எழுத்தின் அளவு: அ + அ -
தூத்துக்குடி அருகே நடுக்கடலில், படகில் பிடிபட்ட 300 கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருள் மற்றும் அதிநவீன ரக துப்பாக்கிள் பறிமுதல் செய்த காவற்படையினர், இதுதொடர்பாக இலங்கையை சேர்ந்த 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி அருகே நடுக்கடலில், வேகமாக சென்ற இலங்கையை சேர்ந்த படகு ஒன்றை, கடலோர காவல் படையினர் சுற்றி வளைத்துப் பிடித்து சோதனையிட்டனர். அப்போது அந்த படகில் 300 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்களும், 6 நவீன ரக துப்பாக்கிகளும் இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக படகில் இருந்த 6 பேரை கடலோர காவல் படையினர் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், போதைப்பொருட்களும், துப்பாக்கிகளும் பாகிஸ்தானிலிருந்து படகு மூலம் கடத்தி வரப்பட்டு ஒப்படைக்கப்பட்டது தெரியவந்தது. எனவே இந்த கடத்தலில், சர்வதேச கடத்தல் கும்பல் அல்லது தீவிரவாதிகளுக்‍கு தொடர்பு உள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட 6 பேரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00