நிவர் புயலால் பாதிக்கப்பட்ட ஏழை-எளிய மக்களுக்கு, அ.ம.மு.க. சார்பில் உணவுப்பொருட்கள் விநியோகம்

Nov 27 2020 6:42AM
எழுத்தின் அளவு: அ + அ -
நிவர் புயலால் பாதிக்‍கப்பட்ட ஏழை எளிய மக்‍களுக்‍கு, அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகம் சார்பில், உணவுப்பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டன.

செங்கல்பட்டு வடக்கு மாவட்டச் செயலாளர் திரு. ம. கரிகாலன் ஆலோசனைப்படி, மாவட்ட பிரதிநிதி வழக்கறிஞர் திரு. மணிகண்டன் ஏற்பாட்டின் பேரில், பர்மா காலனி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள 500க்கும் மேற்பட்டோருக்‍கு, ஆலந்தூர் பகுதி கழக செயலாளர் திரு. A. N. லட்சுமிபதி அன்னதானம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் திரு. ரவி, மாவட்ட பிரதிநிதி திருமதி. சுபா உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

கடலூர் கிழக்கு மாவட்டம் கடலூர் வடக்கு ஒன்றிய கழகம் சார்பாக, பெரியகாட்டுபாளையம் பகுதியைச் சேர்ந்த 500 பேருக்கு, உணவு, தண்ணீர் பாட்டில் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை, கழக அமைப்புச் செயலாளர் திரு. கே.எஸ்.கே. பாலமுருகன், கடலூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் ஆடிட்டர் திரு. என்.சுந்தரமூர்த்தி ஆகியோர் வழங்கினர். கடலூர் வடக்கு ஓன்றிய செயலாளர் திரு. ஆர்.பாடலீஸ்வரன், மாவட்ட அவைத்தலைவர் திரு. ஏ.முருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

கடலூர் கிழக்கு மாவட்டம் கடலூர் நகர அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக, தட்சிணாமூர்த்தி நகர் பகுதி மக்கள் சுமார் 500 பேருக்கு, உணவு, பிஸ்கட், தண்ணீர் பாட்டில் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை, கழக அமைப்புச் செயலாளர் திரு. கே.எஸ்.கே.பாலமுருகன், கடலூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் ஆடிட்டர் திரு. என்.சுந்தரமூர்த்தி ஆகியோர் வழங்கினர். கடலூர் நகர செயலாளர் திரு. வி. ராதாகிருஷ்ணன், வழக்கறிஞர் அணி துணைச் செயலாளர் திரு. சத்யராஜ், மாவட்ட அவைத்தலைவர் திரு. ஏ.முருகன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் இதில் பங்கேற்றனர்.

கடலூர் மேற்கு மாவட்டம் புவனகிரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிவெட்டி கிராமத்தில் உள்ள 500 ஏழை எளிய மக்களுக்கு, ரொட்டி, பிஸ்கட் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன. கழக அமைப்புச் செயலாளர் திரு. கே.எஸ்.கே. பாலமுருகன் மற்றும் ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00