நடிகர் விஜய் சேதுபதியின் மகளுக்கு, சமூக வலைதளம் மூலம் பாலியல் மிரட்டல் - குற்றவாளியை கைது செய்ய பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தல்

Oct 20 2020 2:00PM
எழுத்தின் அளவு: அ + அ -
நடிகர் விஜய் சேதுபதியின் மகளுக்கு, சமூக வலைதளம் மூலம் பாலியல் மிரட்டல் விடுத்த நபரை கைது செய்ய வேண்டுமென, பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறை சித்தரிக்கும் "800" என்ற திரைப்படத்தில், நடிகர் விஜய் சேதுபதி, முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்தார். ஆனால், இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், நேற்று அத்திரைப்படத்தில் இருந்து விலகுவதாக விஜய் சேதுபதி அறிவித்தார். முன்னதாக விஜய் சேதுபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுக்கும் வகையில், ட்விட்டரில் "ரித்திக்" என்ற பெயர் கொண்ட நபர், ஆபாசமாக பதிவிட்டிருந்தார். இதற்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனம் எழுந்துள்ளது.

பாடகி சின்மயி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ஏன் இந்த சமுதாயம் இவ்வளவு மோசமாக இருக்கிறது எனவும், இதை பார்த்த அனைவரும் அமைதியாக இருப்பது வெட்கக்கேடானது எனவும் பதிவிட்டுள்ளார். பொதுவெளியில் ஒரு குழந்தைக்கு பாலியல் மிரட்டல் விடுக்கும் இது போன்ற ஆண்கள் எவ்வாறு வளர்க்கப்படுகிறார்கள் எனவும் சின்மயி, கேள்வி எழுப்பியுள்ளார். தனது பதிவோடு, சென்னை காவல்துறையின் டிவிட்டர் பக்கத்தையும் சின்மயி "Tag" செய்துள்ளார். அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரும், மிரட்டல் விடுத்த நபரை கைது செய்ய வேண்டுமென சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00