தோல்வி பயத்தால் வேளாண் சொசைட்டி தேர்தல்கள் ஒத்திவைப்பு : அதிகாரிகளின் அலட்சியத்தைக் கண்டித்து அ.ம.மு.க சாலை மறியல்

Oct 1 2020 11:58AM
எழுத்தின் அளவு: அ + அ -
தோல்வி பயம் காரணமாக மதுரை தாலுகா வேளாண் சொசைட்டி தேர்தல்கள் ஒத்திவைக்‍கப்பட்டதைக்‍ கண்டித்து, அ.ம.மு.க -வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மதுரை தாலுகா வேளாண் விளைபொருள் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில், 11 நிர்வாக குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல், இன்று ஞான ஒளிவுபுரம் பகுதியில் உள்ள கூட்டுறவு சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், அ.ம.மு.க-வினர் வேட்புமனு தாக்கல் செய்ததற்கான ஒப்புகை சீட்டு வழங்காமல் தேர்தல் அதிகாரிகள் இழுத்தடித்தனர். இதனைக்‍‍ கண்டித்து, மாவட்ட செயலாளர் திரு.மா.ஜெயபால் தலைமையில் கழகத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரி நோட்டிஸ் ஒட்டியதையடுத்து இரு தரப்பினரும் கலைந்துசென்றனர்.

இதேபோல் மதுரை மேலூர் வேளாண் கூட்டுறவு சங்க நிர்வாக்குழு உறுப்பினர்கள் தேர்வுக்கான வேட்புமனு தாக்கல் நடைபெறுவதாக இருந்த நிலையில், சட்ட ஒழுங்கை காரணம் காட்டி தேர்தல் ஒத்திவைப்பதாக கூறி தேர்தல் அதிகாரி அறிவிப்பு வெளியிட்டார். தேர்தலை நடத்தாமல் உயர்நீதிமன்ற உத்தரவை கலங்கப்படுத்தும் வகையில் செயல்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மேலூர் காவல்நிலையத்தில் கழக அம்மா பேரவை துணை செயலாளர் திரு. செல்வராஜ் புகார் அளித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00