மதுரை வேளாண் கூட்டுறவு சங்கத் தேர்தலை முழுமையாக வீடியோ பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

Sep 29 2020 6:48PM
எழுத்தின் அளவு: அ + அ -
மதுரை வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் மற்றும் மேலூர் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தேர்தலை முழுமையாக வீடியோ பதிவு செய்யவும், காவல்துறை பாதுகாப்பு வழங்கவும், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த திரு.செல்வராஜ் உயர்நீதிமன்ற மதுரைக்‍ கிளையில் தாக்கல் செய்த மனுவில், மேலூர் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் கடந்த 2018-ம் ஆண்டு தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆனால் ஆளுங்கட்சியின் தூண்டுதலின்பேரில், தேர்தல் நடத்தும் அதிகாரி, அலுவலகத்தில் இல்லாமல் வேட்பு மனுக்‍களை வாங்கவில்லை என்றும், இதுகுறித்து மேலூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதாகவும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

பின்னர் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. தற்போது மேலூர் வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்திற்கு வரும் அக்டோபர் 7-ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தேர்தல் நடைபெறும்போது முழுமையாக வீடியோ பதிவு செய்ய வேண்டும் என கோரிக்‍கை விடுக்‍கப்பட்டது.

இதேபோல் மதுரையை சேர்ந்த பிரபு என்பவர், மதுரை தாலுகா வேளாண் உற்பத்தியாள கூட்டுறவு சங்க தேர்தலை வீடியோ பதிவு செய்வதுடன், காவல்துறை பாதுகாப்பு வழங்க மனுத்தாக்‍கல் செய்தார். மனுக்களை விசாரித்த நீதிபதிகள் சத்யநாராயணன், ராஜமாணிக்கம் ஆகியோர் கொண்ட அமர்வு, தேர்தலின்போது காவல்துறை உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும், தேர்தலை முழுமையாக வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00