ஊரடங்கால் ஆன்லைன் வர்த்தகம் மூடப்பட்டதன் விளைவு - பண நெருக்‍கடியால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயற்சி

Sep 28 2020 3:10PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஆன்லைன் வர்த்தகம் மூடப்பட்டதன் விளைவாக ஏற்பட்ட பண நெருக்‍கடியால், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர், கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியது.

நடுநிலை கிராமத்தைச் சேர்ந்த வினோத்குமார் என்பவர், தனியார் ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் பூசாரிபட்டியைச் சேர்ந்த சீனிவாசன், சாமிநாதன் ஆகிய இருவரையும், அதே ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தில் பணிக்கு சேர்த்துள்ளார். ஊரடங்கு காரணமாக ஆன்லைன் வர்த்தக நிறுவனம் மூடப்பட்டது. இதன் விளைவாக, தாங்கள் இழந்த பணத்தை ஈடு செய்யுமாறு, வினோத்குமாரை அணுகி, சீனிவாசனும், சாமிநாதனும் வற்புறுத்தி உள்ளனர். இந்நிலையில் இன்று, வினோத்குமார் வீட்டுக்கு சென்ற இருவரும், வீட்டில் இருந்த 10 சவரன் நகை, ஒரு லட்சம் ரொக்கம் ஆகியவற்றை எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த வினோத்குமார், தனது தந்தை, தாய் மற்றும் சகோதரருடன், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00