மத்திய அரசின் வேளாண் சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்‍கக்‍கூடாது - மக்‍கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தல்

Sep 27 2020 4:45PM
எழுத்தின் அளவு: அ + அ -
விவசாயிகளின் நலனைக்‍ காக்‍கும் வகையில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்‍கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்‍கக்‍கூடாது என மக்‍கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான திரு.கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.

திரு.கமல்ஹாசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்‍கையில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்கள், சிறு குறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கேள்விக்‍குறியாக்கி இருப்பதால் விவசாயிகள் மத்தியில் கவலை எழுந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஹைட்ரோ கார்பன், மீத்தேன், எட்டுவழிச்சாலை என ஏற்கனவே தமிழக விவசாயிகளின் வயிற்றில் அடித்த எடப்பாடி அரசு, புதுச்சட்டத்திற்கு ஆதரவு அளித்திருப்பது மிகப்பெரும் துரோகமாகும் என கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார். தமிழக அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக்‍கொண்டு, இந்த சட்டங்களை திரும்பப்பெற மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்றும் கேட்டுக்‍கொண்டுள்ளார். விவசாயிகளின் நலனைக்‍ காக்‍கும் வகையில், குடியரசுத் தலைவர் வேளாண் சட்டங்களை நாடாளுமன்றத்திற்கு திரும்ப அனுப்ப வேண்டும் என்றும் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00