திருவாரூர் அருகே பார்சல் மூலம் வெடிகுண்டு அனுப்பப்பட்ட சம்பவம் - தமிழ் மாநில காங்கிரஸ் பிரமுகர் உட்பட இருவர் கைது

Sep 27 2020 1:24PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருவாரூர் மாவட்டத்தில், பார்சல் மூலம் வெடிகுண்டு அனுப்பிய தமிழ் மாநில காங்கிரஸ் பிரமுகர் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர். தப்பியோடிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

நீடாமங்கலத்தைச் சேர்ந்த வீடியோ கடை உரிமையாளர் வீரக்குமார் என்பவருக்கு, கடந்த 18-ம் தேதி தனியார் கூரியர் மூலம் திருச்சியிலிருந்து வெடிபொருட்கள் வந்தது தொடர்பான வழக்கில், தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் அறந்தாங்கி மாவட்ட துணைத் தலைவர் திரு. சத்யமூர்த்தி, தஞ்சாவூரைச் சேர்ந்த அமீர் சையது என்கிற அமிர்தராஜ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். கடந்த 10 வருடங்களுக்கு மேலாக அமீர் சையது, கள்ளநோட்டு மாற்றுவது, போலி மருத்துவர்களை மிரட்டி பணம் பறிப்பது, காவல்துறை உயர் அதிகாரிகளுடன் புகைப்படம் எடுத்து வைத்துக் கொண்டு குற்றச் செயலில் ஈடுபட்டு வந்தது என பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளது விசாரணையில் தெரியவந்தது.

திருச்சியில் உள்ள எல்பின் இ.காம் நிறுவனத்தை மிரட்டி ஒரு கோடி ரூபாய் வரை கேட்டதாகவும், ஆனால், பணம் கிடைக்காததால் ஆத்திரமடைந்த சத்யமூர்த்தியும், அமீர் சையதும், எல்பின் இ.காம் நிறுவனத்தால் பாதிக்கப்பட்​டவரின் பெயரில் ஒரத்தநாட்டைச் சேர்ந்த ஒருவரையும், நீடாமங்கலத்தைச் சேர்ந்த வீரக்குமாரையும் அந்நிறுவனம் மிரட்டுவதுபோல் வெடிகுண்டு பார்சலை அனுப்பியிருப்பது விசாரணையில் தெரியவந்தது. திருச்சி முகவரியிலிருந்து பார்சலை அனுப்பிய பெண்ணையும், சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த சரவணன் என்பவரையும் தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

இதனிடையே, அமீர்சையது, சத்யமூர்த்தி ஆகிய இருவரும் நீடாமங்கலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிபதி உத்தரவுப்படி திருச்சி மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00