நெல்லை அருகே வெடிகுண்டு வீசி 2 பெண்கள் படுகொலை - கொடூர கொலைகள் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை

Sep 26 2020 3:36PM
எழுத்தின் அளவு: அ + அ -
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே, முன்விரோதம் காரணமாக பட்டப்பகலில் பெட்ரோல்குண்டு மற்றும் நாட்டுவெடிகுண்டு வீசிய மர்மக்‍கும்பல், இரண்டு பெண்களை தலை துண்டித்து படுகொலை செய்துள்ள சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாங்குநேரி அருகே மறுகால்குறிச்சியைச் சேர்ந்த நம்பிராஜன் என்பவர், கடந்த ஆண்டு அதே ஊரைச் சேர்ந்த வான்மதி என்பவரை காதலித்து திருமணம் நிலையில், 10 நாட்களிலேயே, மனைவியின் சகோதரர் மற்றும் உறவினர்களால் கொல்லப்பட்டார். இதையடுத்து, கடந்த மார்ச் மாதம் வான்மதியின் உறவினர்கள் இருவர், நம்பிராஜன் தரப்பினரால் கொல்லப்பட்டனர். இதற்கு பழிதீர்க்‍கும் வகையில், நம்பிராஜனின் தாயார் சண்முகத்தாய், அவரது சகோதரி சாந்தி ஆகியோரை 12 பேர் கொண்ட மர்மக்‍கும்பல், இன்று தலை துண்டித்து படுகொலை செய்துள்ளது. முகக்கவசம் அணிந்தபடி ஊர் முழுவதும் பெட்ரோல் குண்டு, நாட்டுவெடிகுண்டுகளை வீசி இந்தக்‍கும்பல் அராஜகத்தில் ஈடுபட்டதால் பொதுமக்‍கள் அச்சமடைந்தனர். மேலும், சண்முகத்தாயின் தலையை வெட்டி ஊர்மத்தியில் வைத்துவிட்டு அந்தக்‍கும்பல் தப்பியோடியது. உடல்களை கைப்பற்றிய காவல்துறையினர், நாங்குநேரி சுங்கச்சாவடியில் சி.சி.டி.வி.யில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர். கொலை தொடர்பாக இசக்கி பாண்டி என்பவரின் மனைவி பாப்பா உள்பட 5 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00