எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவுக்‍கு திரைக்‍கலைஞர்கள் அஞ்சலி - மாபெரும் கலைஞனை இழந்து தவிப்பதாக வேதனை

Sep 25 2020 3:44PM
எழுத்தின் அளவு: அ + அ -
பின்னணி பாடகர் திரு. எஸ்.பி. பாலசுப்பிரமணியம் மறைவுக்‍கு, திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

எஸ்.பி.பியின் இனிமையாக கம்பீரமான குரல் இன்னும் நூறு ஆண்டுகளுக்கு நம் செவிகளில் ஒலித்துக் கொண்டிருக்கும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். அவருக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் உள்ளதாகவும், அவரது இசை, குரல் மட்டுமல்லாமல், அவரது மனிதநேயத்தையும் ரசிகர்கள் நேசித்ததாக தெரிவித்துள்ளார்.

அன்னைய்யா S.P.B குரலின், நிழல் பதிப்பாக பல காலம் வாழ்ந்தது தனக்கு வாய்த்த பேறு என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். ஏழு தலைமுறைக்கும் S.P.Bயின் புகழ் வாழும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மறைவு பேரிழப்பு என, இசையமைப்பாளர் திரு. ஏர்.ஆர்.ரகுமான் தெரிவித்துள்ளார்.

ஆயிரம் காதல் கவிதைகள் பாடிய உனக்கு, கண்ணீர் கவிதை வடிக்க வைத்துவிட்டதே காலம் என கவிஞர் வைரமுத்து, கவிதையஞ்சலி செலுத்தியுள்ளார். இசையை இழந்த மொழியாய் அழுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இசை உலகத்திற்கு பெரும் இழப்பு ஏற்பட்டுவிட்டதாகவும், உலகமெல்லாம் பறந்து 40 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடி, கோடிக்கணக்கான ரசிகர்களின் காதுகளில் தேன் சொரிந்த கானக்குயில் கண் மூடிக்கொண்டது என நடிகர் விவேக் தெரிவித்துள்ளார். SPB ஒரு சகாப்தம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இசை உலகிற்கு இன்று கருப்பு நாள் என தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி தெரிவித்துள்ளார். SPB எனும் சகாப்தம் முடிவுக்கு வந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00