தமிழகத்தில் ஒரேநாளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா - சென்னையில் மேலும் 989 பேருக்கு தொற்று

Sep 22 2020 6:41PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்‍கை 5 லட்சத்து 52 ஆயிரத்தைக்‍ கடந்துள்ளது. இன்று ஒரே நாளில் 76 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இன்று ஒரே நாளில் 5 ஆயிரத்து 337 பேர் வைரஸ் தொற்றுக்‍கு ஆளாகி இருப்பதாக, தமிழக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்ட மருத்துவ அறிக்‍கையில் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

கொரோனா வைரசால் இதுவரை பாதிக்‍கப்பட்டுள்ளோர் எண்ணிக்‍கை 5 லட்சத்து 52 ஆயிரத்து 674-ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரேநாளில், கொரோனா வைரஸ் காரணமாக 76 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களுடன் சேர்த்து தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்‍கை 8 ஆயிரத்து 947-ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று ஒரேநாளில் 989 பேர், வைரஸ் தொற்றுக்‍கு ஆளாகியுள்ளனர். இவர்களுடன் சேர்த்து சென்னையில் இதுவரை ஒரு லட்சத்து 57 ஆயிரத்து 614 பேர் கொரோனா வைரசால் பாதிக்‍கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5 ஆயிரத்து 406 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை 4 லட்சத்து 97 ஆயிரத்து 377 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இன்று அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவையில் 595 பேருக்‍கும், திருப்பூரில் 369 பேருக்‍கும், சேலத்தில் 291 பேருக்‍கும், கடலூரில் 233 பேருக்‍கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

செங்கல்பட்டு - 231, திருவள்ளூர் - 230, காஞ்சிபுரம் - 209, தஞ்சை - 155 பேர் கொரோனாவால் பாதிக்‍கப்பட்டுள்ளனர்.

ஈரோட்டில் 136 பேரும், திருவண்ணாமலையில் 126 பேரும், திருவாரூரில் 116 பேரும், திருச்சியில் 113 பேரும் கொரோனா வைரஸ் தொற்றுக்‍கு ஆளாகியுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00