திருப்பூரில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட வாலிபர் மரணம் - உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

Sep 22 2020 4:13PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருப்பூரில், போலீஸ் விசாரணைக்‍காக அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்ததாகக்‍கூறி, அரசு மருத்துவமனையில் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மற்றும் பொதுமக்‍கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் அருகே கே.செட்டிபாளையத்தைச் சேர்ந்த சின்னசாமி என்பவரின் மகன் மணிகண்டன், பனியன் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இவர் ஏற்கனவே விவாகரத்து பெற்ற நிலையில், சரண்யா என்ற பெண்ணுடன் வசித்து வந்துள்ளார். கடந்த 2 தினங்களுக்‍கு முன்பு சரண்யா சுடுதண்ணீர் ஊற்றி கொல்லப்பட்டதாகக்‍ கூறப்படுகிறது. இதுதொடர்பான விசாரணைக்‍காக மணிகண்டனை போலீசார் அழைத்துச் சென்றுள்ளனர். சில மணி நேரத்திலேயே மணிகண்டன் உயிரிழந்துவிட்டதாகக்‍கூறி, திருப்பூர் அரசு மருத்துவமனைக்‍கு சடலத்தை அனுப்பிவைத்தனர்.

இந்நிலையில், மணிகண்டனை போலீசார் அடித்துக்‍கொன்றதாகவும், காவல்துறையினர் மீது நடவடிக்‍கை எடுக்‍கக்‍கோரியும் உறவினர்கள் மற்றும் பொதுமக்‍கள் அரசு மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னதாக, திருப்பூர் அரசு மருத்துவமனையில், கொரோனா வார்டில் இருவர் பலியானது குறித்து விசாரணை நடத்த வருகை தந்த மாவட்ட ஆட்சியர் திரு.விஜய கார்த்திகேயனை, மணிகண்டனின் உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00