முதலமைச்சர் வேட்பாளர் யார்? என்பதில் ஆளும்கட்சியில் உச்சக்‍கட்ட மோதல் - அமைச்சர்களின் அவசர ஆலோசனையால் பரபரப்பு

Aug 15 2020 12:34PM
எழுத்தின் அளவு: அ + அ -
அஇஅதிமுகவில் அடுத்த முதலமைச்சர் யார்? என்பதில் உச்சக்‍கட்ட குழப்பம் நிலவி வருகிறது. இதையொட்டி, அமைச்சர்கள் தங்களது ஆதரவாளர்களுடன் தனித்தனி குழுக்‍களாக ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், மாண்புமிகு அம்மா ஆகியோரால் ராணுவக்‍ கட்டுப்பாட்டுடன் வளர்க்‍கப்பட்ட அஇஅதிமுக, தற்போது எந்தவிதக்‍ கட்டுப்பாடும் அற்ற நிலையில் தனித்தனி குழுக்‍களாக காட்சியளிக்‍கும் நிலைக்‍கு தள்ளப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக அடுத்த முதலமைச்சர் யார்? என்பதில் உச்சக்‍கட்ட குழப்பம் நிலவி வருகிறது.

திரு. பழனிசாமியும், திரு. பன்னீர்செல்வமும் மட்டுமின்றி, அமைச்சர்கள் மேலும் சிலரும் முதலமைச்சர் நாற்காலி கனவோடு காய் நகர்த்தத் தொடங்கியுள்ளனர். அமைச்சர்கள் ஒவ்வொருவரும், தங்கள் மனம்போல அடுத்த முதலமைச்சர்களின் பெயர்களை முன்மொழியத் தொடங்கியுள்ளனர்.

இந்த நிலையில், அடுத்த முதலமைச்சர் திரு. பன்னீர்செல்வம்தான் என தேனி உள்ளிட்ட பகுதிகளில் ஒட்டப்பட்ட சுவரெட்டிகள், கட்சிக்‍குள் மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கோஷ்டி பூசல் காரணமாக, இந்த சுவரொட்டிகள் கிழிக்‍கப்பட்டதால் மோதல் உருவாகும் நிலையும் ஏற்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, சென்னையில் இன்று அமைச்சர்கள், தங்களது ஆதரவாளர்களுடன் தனித்தனி குழுக்‍களாக இதுபற்றி காரசாரமாக விவாதித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்‍கின்றன.

ராணுவக்‍ கட்டுப்பாடு நிறைந்த அஇஅதிமுக, சிலரின் சுயநல நோக்‍கத்திற்காக இப்படி சீர்குலைந்து இருப்பதைக்‍ கண்டு, கட்சியின் உண்மைத் தொண்டர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00