முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமில் கொண்டாடப்பட்ட யானைகள் தின விழா : 27 வளர்ப்பு யானைகளுக்கு 15 வகையான சிறப்பு உணவுகள்

Aug 12 2020 5:29PM
எழுத்தின் அளவு: அ + அ -
நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமில், சர்வதேச யானைகள் தின விழா, எளிமையாகக் கொண்டாடப்பட்டது. ஆண்டுதோறும் ஆகஸ்ட் 12ஆம் தேதி, உலக யானைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, இன்று, முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள வளர்ப்பு யானைகள் முகாமில் யானைகள் தினம் எளிமையாக கொண்டாடப்பட்டது. முகாமில் உள்ள 27 வளர்ப்பு யானைகள், உணவு கூடத்திற்கு முன்பு வரிசையாக நிறுத்தப்பட்டு அரிசி சாதம், கேழ்வரகுக் களி, வெல்லம், சத்து மாத்திரை, லேகியம், ஆப்பிள், மாதுளை, கரும்பு உட்பட 15 வகையான சிறப்பு உணவுகள் வழங்கப்பட்டன. முன்னதாக, கருத்தரங்கு கூடத்தில் வனத்துறை ஊழியர்களின் கைவண்ணத்தில் உருவான யானை உருவங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டன. பின்னர் அதனை தயாரித்த வனத்துறை ஊழியர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. முதுமலை புலிகள் காப்பகத்தில் 600 யானைகள் இருப்பதாகவும், அதனால் காடு செழிப்பாக இருப்பதாகவும் கூறிய வனத்துறை அதிகாரிகள், மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மட்டும் ஐந்தாயிரம் முதல் ஆறாயிரம் யானைகள் இருப்பதாக தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00