திருப்பூர் அருகே 20 ஆண்டுகளுக்‍குப் பிறகு நிரம்பிய நொய்யல் ஆற்றின் தடுப்பணை - சுற்றுவட்டார விவசாயிகள் உற்சாகம்

Aug 12 2020 4:26PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருப்பூரில் சாயக்கழிவுகள் காரணமாக கடந்த 20 ஆண்டுகளாக திறக்கப்பட்டிருந்த சின்னமுத்தூர் அணை மதகுகள், நொய்யல் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் அடைக்கப்பட்டுள்ளன. இதில் தேக்கப்படும் நீர், ஆத்துப்பாளையம் அணைக்கு திறந்து விடப்பட்டுள்ளதால், சுற்று வட்டாரத்தில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நொய்யல் ஆறு கோவை மாவட்டத்தில் உருவாகி திருப்பூர் மாவட்டம் வழியாகப் பாய்ந்து ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே காவிரி ஆற்றில் கலக்கிறது . இந்த ஆற்று நீரை, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்ட விவசாயிகளும் பயன்படுத்தும் வகையில், ஒரத்துப்பாளையம் மற்றும் சின்னமுத்தூர் பகுதியில் அணைகள் கட்டப்பட்டன. ஆனால், சாயக்கழிவுகளை நொய்யல் ஆற்றில் திறந்து விட்டதால், நிலத்தடி நீரின் தன்மை பாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து விவசாயிகள் வழக்கு தொடர்ந்ததால், நொய்யல் ஆற்றுக்குக் குறுக்காக அணைகளில் நீர் தேக்கக்கூடாது என்று உத்தரவிடப்பட்டது. ஆனால் மாண்புமிகு அம்மாவின் தொடர் நடவடிக்கையால், ருப்பூரில் சாய ஆலைகள், ஜீரோ டிஸ்ஜார்ஜ் தொழில்நுட்பம் மூலம் சாயக்கழிவுகளை வெளியேற்றி வருகின்றன. இதனைத் தொடர்ந்து, காங்கேயம் பகுதியை சேர்ந்த தனியார் பள்ளி மாணவ மாணவிகள் 5 பேர், நொய்யல் ஆற்றில் வரும் வெள்ள நீரை, சின்னமுத்தூர் தடுப்பணையில் தடுத்து, ஆத்துப்பாளையம் அணைக்கு திருப்புவது குறித்து ஆய்வு மேற்கொண்டு, அதன் அறிக்கையை தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் அறிக்கை சமர்ப்பித்திருந்தனர். இதன் அடிப்படையில் தற்போது நொய்யல் ஆற்றில் வரும் மழை நீர், சின்னமுத்தூர் தடுப்பணை மூலமாக ஆத்துப்பாளையம் அணைக்கு செல்கிறது. இதனால் 20 ஆண்டுகள் தண்ணீர் காணாத அணைக்கு, தற்போது தண்ணீர் வரவுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00