சென்னை மணலியிலிருந்து இரண்டாம் கட்டமாக அனுப்பி வைக்கப்படும் அமோனியம் நைட்ரேட் - 12 கன்டெய்னர்களில் 229 டன் ஹைதராபாத் நிறுவனத்துக்கு கொண்டு செல்லப்படுவதாக தகவல்

Aug 11 2020 11:36AM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னை மணலி கிடங்கில் உள்ள அமோனியம் நைட்ரேட் இரண்டாம் கட்டமாக ஐதராபாத் கொண்டு செல்லப்படுகிறது.

பெய்ரூட் துறைமுகத்தில் வைக்கப்பட்டிருந்த அமோனியம் நைட்ரேட் வெடித்து சிதறியதில் 100 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில், சுங்கத்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட 740 டன் அமோனியம் நைட்ரேட் மணலியில் உள்ள சேமிப்புக் கிடங்கில் வைக்கப்பட்டிருப்பது தொடர்பாக கேள்விகள் எழுந்தன. பாதுகாப்பு கருதி உடனடியாக அமோனியம் நைட்ரேட்டையும் அப்புறப்படுத்த மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், ஐதராபாத்தைச் சேர்ந்த நிறுவனம் அமோனியம் நைட்ரேட்டை மின்னணு ஏலத்தில் எடுத்தது. இதனை அடுத்து முதல் கட்டமாக நேற்று முன்தினம் 10 கண்டெய்னர்களில் 180 டன் அமோனியம் நைட்ரேட் ஐதராபாத் கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில், இரண்டாவது கட்டமாக மேலும் 229 டன் அமோனியம் நைட்ரேட் 12 கண்டெய்னர்களில் இன்று ஐதராபாத் கொண்டு செல்லப்படுகின்றன. எஞ்சியுள்ள அமோனியம் நைட்ரேட் ஓரிரு நாட்களில் அப்புறப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00