கோவை, நீலகிரி மாவட்டங்களில் வலுக்‍கும் கனமழை - அவலாஞ்சி பகுதியில் 581 மில்லி மீட்டர் அளவுக்‍கு மழை பதிவு

Aug 6 2020 5:18PM
எழுத்தின் அளவு: அ + அ -
நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் உதகை, கூடலூர், குந்தா, பந்தலூர் ஆகிய பகுதிகளில் 4-வது நாளாக இன்றும் தொடர்ந்து கன மழையுடன் பலத்த காற்றும் வீசி வருகிறது. இதனால் நூற்றுக்கணக்கான மரங்கள் சாலைகள் மற்றும் வீடுகள் மீதும் விழுந்துள்ளன. மரங்கள் விழுந்ததில் இதுவரை 2 பேர் உயிர் இழந்துள்ளார். சாலைகளில் விழுந்த மரங்களால் சாலை போக்குவரத்து பாதிக்கபட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் இருந்த பொது மக்கள் வெளியேற்றப்பட்டு கூடலூர் மற்றும் எமரால்டு, குந்தா பகுதிகளிலுள்ள முகாம்களில் தங்க வைக்கபட்டுள்ளனர். கன மழையினால் மயார் ஆறு மற்றும், புன்னம் புழ ஆறுகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுளது. பல இடங்களில் மரங்கள் விழுந்துள்ளதால் கூடலூர், பந்தலூர், உதகை தாலுகா பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கபட்டுள்ளது. மழை முடியும் வரை பொது மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதிகபட்சமாக அவலாஞ்சி பகுதியில் 581 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00