நீலகிரி மாவட்டத்தில் வெள்ளைப் பூண்டுக்கு உரிய விலை : விவசாயிகள் உற்சாகம்

Aug 2 2020 5:48PM
எழுத்தின் அளவு: அ + அ -
நீலகிரி மாவட்டத்தில் மருத்துவ குணம் கொண்ட வெள்ளைப் பூண்டு கிலோ 350 ரூபாய் வரை விற்பனையாவதால் விவசாயிகள் உற்சாகமடைந்துள்ளனர்.

மலை மாவட்டமான நீலகிரியில் தேயிலைக்கு அடுத்ததாக மலைக்‍காய்கறிகள் அதிக அளவில் பயிராகின்றன. கடந்த 5 மாத காலமாக கொரோனா பிரச்னை காரணமாக, இங்கிருந்து கேரட், பீட்ரூட், முட்டைகோஸ் போன்ற காய்கறிகள் பிற பகுதிகளுக்‍கு கொண்டு செல்லப்படுவது பாதிக்‍கப்பட்டதால், விவசாயிகள் பெரும் இழப்பைச் சந்தித்தனர். இந்த நிலையில் தற்போது இங்கு விளையும் வெள்ளைப் பூண்டு முதல் ரகம் கிலோ 350 ரூபாய் வரை விலை போவதால் அதனை பயிரிட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

நீலகிரி மாவட்டத்திற்கு உட்பட்ட மசினகுடி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் விளையும் வெள்ளைப் பூண்டு, குஜராத் மாநிலத்திற்கு அதிக அளவில் விற்பனைக்‍கு அனுப்பப்படுகிறது. பூண்டின் தற்போதைய விலை குறையாமல் இருக்‍க தமிழக அரசு உரிய நடவடிக்‍கை எடுக்‍க வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00