சென்னை அருகே போலீஸ் தாக்‍கியதாகக்‍ கூறி தீக்‍குளித்தவர் உயிரிழப்பு - பணியிடை நீக்‍கம் செய்யப்பட்ட காவல்ஆய்வாளருக்‍கு நெருக்‍கடி

Aug 2 2020 5:43PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னையை அடுத்த புழல் அருகே, போலீஸ் தாக்‍கியதாகக்‍ கூறி தீக்‍குளித்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

புழல் பாலவிநாயகர் கோயில் தெருவை சேர்ந்த ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான வீட்டில், சீனிவாசன் என்பவர் வாடகைக்கு இருந்துள்ளார். வாடகை பிரச்னை தொடர்பாக உரிமையாளர் ராஜேந்திரன் அளித்த புகாரில், காவல் ஆய்வாளர் பென் ஷாம், சீனிவாசனிடம் விசாரணை நடத்தியதாகவும், அப்போது சீனிவாசனை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த சீனிவாசன், தீக்குளித்ததோடு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், புழல் காவல் ஆய்வாளர் பென்ஷாமை பணியிடை நீக்கம் செய்து, சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார். இதினிடையே, தீக்குளித்த சீனிவாசன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் புழல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00