சென்னையில் கொரோனா சித்த மருத்துவ மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 1,090 நோயாளிகள் பூரண குணமடைந்து வீடுகளுக்கு திரும்பினர்

Jul 14 2020 4:23PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னை சாலிகிராமம் மற்றும் வியாசர்பாடியில் கொரோனா சித்த மருத்துவ மையங்களில் சிகிச்சை பெற்று வந்த ஆயிரத்து 090 நோயாளிகள் பூரண குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.இந்த மையங்களில் ஒருவர்கூட உயிரிழக்கவில்லை.

சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு சென்னை மாநகராட்சி சார்பில் சாலிகிராமம் மற்றும்,வியாசர்பாடியில் உள்ள கல்லூரிகளில் சித்த மருத்துவ சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனியார் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள சித்த மருத்துவ மையம் மூலம் சித்தமருத்துவர் வீரபாபு தலைமையிலான மருத்துவக் குழுவினர் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த மையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த 1400 பேரில் 984 பேர் பூரணகுணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். தற்போது 276 ஆண்கள் 140 பெண்கள் உள்ளிட்ட 416 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதேபோல் வடசென்னை பகுதியில் வியாசர்பாடியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரசு கலைக்கல்லூரியில் தமிழக அரசு மற்றும் மத்திய ஆயுஷ் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள சித்த மருத்துவ சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த 239 பேரில் 106 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். தற்போது 123 பேருக்கு சிகிச்சை அளிக்கப் பட்டுவருகிறது. கொரோனா சிகிச்சைக்கான இந்த சித்த மருத்துவ மையங்களில் ஒருவர்கூட உயிரிழக்கவில்லை.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00