சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்‍கு - கைதான ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட ஐந்து பேருக்கு வழங்கப்பட சி.பி.ஐ காவல் 2 நாட்களாக மாற்றம்

Jul 14 2020 1:25PM
எழுத்தின் அளவு: அ + அ -
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் போலீஸ் கைதிகளான ஸ்ரீதர் உள்பட 5 பேருக்கும், 2 நாள் சிபிஐ காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்‍ஸ் ஆகியோர், கொடூரக் கொலையில் சி.பி.ஐ கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், காவலர்கள் முருகன், முத்துராஜா ஆகிய 5 பேரையும், 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்‍க அனுமதி கோரி, மதுரை மாவட்ட குற்றவியல் தலைமை நீதிமன்ற நீதிபதி திரு.ஹேமானந்த்குமார் முன்னிலையில் சி.பி.ஐ. அதிகாரிகள் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு விசாரணையின்போது போலீஸ் கைதிகள் 5 பேரும் பலத்த பாதுகாப்புடன் நேரில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

வழக்‍கை விசாரித்த நீதிமன்றம், சிபிஐ கோரிக்கையை ஏற்று, 2 நாள் காவலில் விசாரிக்க அனுமதி அளித்துள்ளது. வரும் 16-ம் தேதி மாலை 5.30 மணிக்‍குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனையடுத்து 5 பேரும் மதுரை மத்திய சிறையில் உள்ள மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பபட்ட பின்னர் சி.பி.ஐ காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவர். சிபிஐ அதிகாரிகள், மதுரை மற்றும் நெல்லையில் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00