தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4 ஆயிரத்து 231 பேருக்‍கு கொரோனா பாதிப்பு - மேலும் 65 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

Jul 9 2020 6:58PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தில் 3 நாட்களுக்‍குப் பிறகு இன்று மீண்டும் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தைக்‍ கடந்துள்ளது. கொரோனாவுக்கு இன்று ஒரேநாளில் 65 பேர் பலியானதையடுத்து, உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆயிரத்து 765-ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 4 ஆயிரத்து 231 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 581 ஆக உயர்ந்தது. சென்னையில் இன்று மட்டும் ஆயிரத்து 216 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 73 ஆயிரத்து 728-ஆக உயர்ந்தது. தமிழகத்தில் இன்று மட்டும் 65 பேர் பலியானதை தொடர்ந்து, கொரோனா பலி எண்ணிக்கை ஆயிரத்து 765 ஆக உயர்ந்தது. தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 3 ஆயிரத்து 994 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். இதுவரை 78 ஆயிரத்து 161 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.

தமிழக சுகாதாரத்துறை அளித்த தகவலின்படி, இன்று அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. திருவள்ளூர் - 364, விருதுநகர் - 289, மதுரை - 262, கள்ளக்‍குறிச்சி - 254, தூத்துக்‍குடி - 196, செங்கல்பட்டு - 169, திருநெல்வேலி - 110, கன்னியாகுமரி - 93, கோவை - 98, சேலம் - 92, தேனி - 90, வேலூரில் 87 பேருக்‍கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலையைச் சேர்ந்த, பிறந்து 25 நாட்களேஆன பெண் குழந்தைக்‍கு கொரோனா தொற்று ஏற்பட்டு, சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00