சாத்தான்குளம் காவல்நிலைய எஸ்.ஐ. ரகுகணேஷ் விசாரணைக்‍கு அழைத்துச்​சென்ற நபர் உயிரிழந்த சம்பவம் - உள்துறை செயலாளர், டி.ஜி.பி. உள்ளிட்டோர் பதிலளிக்‍க உயர்நீதிமன்ற மதுரைக்‍கிளை உத்தரவு

Jul 8 2020 2:49PM
எழுத்தின் அளவு: அ + அ -
சாத்தான்குளம் காவல்துறையினர் தாக்குதலால் மகன் மரணமடைந்ததாகவும், மகன் இறப்பு குறித்து விசாரிக்க உத்தரவிடக்கோரியும் அவரது தாயார் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வடிவு என்பவர், தனது மகன் மகேந்திரன் மரணம் குறித்து விசாரிக்கக்கோரி வழக்கு தொடர்ந்தார். அதில், ஜெயக்குமார் என்பவர் உயிரிழந்த வழக்கில் தனது மூத்த மகன் துரைக்கு தொடர்பு இருப்பதாகக்கூறி, உதவி காவல் ஆய்வாளர் ரகுகணேஷ் கடந்த மே 22-ம் தேதி தனது வீட்டிற்கு வந்து விசாரித்தார். அடுத்த நாள், காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் மற்றும் உதவி காவல் ஆய்வாளர் ரகுகணேஷ் ஆகியோர், அதிகாலையில் மகன் துரையை தேடி, தனது சகோதரி வீட்டிற்கு சென்றதாகவும், அங்கு துரை இல்லாததால், இளையமகன் மகேந்திரனை அழைத்துச் சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.

2 நாட்கள் சட்டவிரோத காவலில் வைத்து சித்திரவதை செய்துவிட்டு விடுவித்ததாகவும், இதில் மகேந்திரன் சுயநினைவு இல்லாத அளவுக்கு கடுமையாக காயமடைந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மகேந்திரன், ஜூன் 13-ம் தேதி சிகிச்சை பலனிற்னி உயிரிழந்ததாக தெரிவித்துள்ளார். மகன் இறப்பு குறித்து முறையாக விசாரித்து, நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பியிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குறிப்பிட்டுள்ள தயார் வடிவு, மகனின் இறப்பு குறித்து முறையாக விசாரிக்கவும், தனக்கு பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிடக்கோரி மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இது தொடர்பாக தமிழக உள்துறைச் செயலர், தமிழக காவல்துறை தலைவர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி காவல் ஆய்வாளர் ரகுகணேஷ் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. சாத்தான்குளம் காவல்துறையினரின் அத்துமீறலால் ஜெயராஜ்-பென்னிக்ஸ் உயிரிழந்த நிலையில், அவர்களால் மேலும் ஒரு இளைஞர் உயிரிழந்ததாக புகார் எழுந்துள்ள சம்பவம் அதிர்சியை ஏற்படுத்தியது.

இதனிடையே சாத்தான்குளம் இரட்டை மரண வழக்கை கையிலெடுத்துள்ள சிபிஐ, இரண்டு வழக்குகளை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00