வீடுகளுக்கான கழிவு நீர் இணைப்புகள் திடீர் துண்டிப்பு : திருமழிசை பேரூராட்சி நிர்வாகத்தினர் அட்டூழியம்

Jul 7 2020 5:57PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை பகுதியில் கட்டணம் செலுத்தவில்லை எனக்‍ கூறி பேரூராட்சி நிர்வாகத்தினர் கழிவுநீர் குழாய் இணைப்புகளை திடீரென துண்டித்து அராஜகத்தில் ஈடுபட்டனர்.

திருமழிசை தேர்வுநிலை பேரூராட்சிக்‍குட்பட்ட வி.பி. கோயில் தெருவில், பாதாள சாக்‍கடை இணைப்புக்‍கான கட்டணத்தை செலுத்துமாறு ஏற்கெனவே பொதுமக்‍களுக்‍கு அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது. தற்போது கொரோனா காலம் என்பதால் அப்பகுதி மக்‍கள் அதற்கான கட்டணத்தை உரிய நேரத்தில் செலுத்தவில்லை எனக்‍ கூறப்படுகிறது. சிலர் பணத்தை செலுத்த முயன்றும் வேறு சில காரணங்களுக்‍காக திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், இன்று திடீரென அப்பகுதிக்‍குச் சென்ற பேரூராட்சி நிர்வாகத்தினர், பொதுமக்‍களுக்‍கு எந்தவிதமான கால அவகாசமும் தராமலும், அவர்களை பேச விடாமலும், வீடுகளுக்‍கான கழிவுநீர் இணைப்புகளை துண்டித்து அராஜகத்தில் ஈடுபட்டனர். எவ்வித முன்னறிவிப்புமின்றி இன்று கழிவுநீர் இணைப்புகள் துண்டிக்‍கப்பட்டதால், அப்பகுதி மக்‍கள் பெரும் அவதிக்‍கு ஆளாகினர்.

சேதமடைந்த கழிவுநீர் குழாய் இணைப்புகளை திருமழிசை பேரூராட்சி நிர்வாகத்தினரே விரைவில் சரிசெய்து தரவேண்டும் என்றும் பாதிக்‍கப்பட்ட மக்‍கள் வலியுறுத்தியுள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00