திருச்சி அருகே சிறுமி எரித்துக் கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் - பிரேதப் பரிசோதனைக்‍குப் பிறகு உடல் தகனம்

Jul 7 2020 5:44PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை அருகே, எரிந்த நிலையில் மீட்கப்பட்ட சிறுமியின் உடல், சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது.

சோமரசம்பேட்டையை அடுத்துள்ள அதவத்தூர் பாளையத்தை சேர்ந்த பெரியசாமி என்பவரது மகள் கங்காதேவி. குப்பை கொட்டுவதற்காக பிற்பகலில் வீட்டை விட்டு வெளியே சென்றவர், வீடு திரும்பாத நிலையில், காட்டுப்பகுதியில் எரிந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்த நிலையில், அவர்களின் வாகனங்களை மறித்து, சிறுமியின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், காவல்துறை வாகனத்தின் கண்ணாடி உடைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்தில் மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு. ஜெயராமன், துணைத்தலைவர் ஆனி விஜயா, திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். இச்சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த திருச்சி சரக ஐஜி திரு. ஜெயராமன், சிறுமி எரித்து கொல்லப்பட்ட வழக்கில் தீவிர விசாரணை மேற்கொள்ளும் வகையில் ஏடிஎஸ்பி மணிவண்ணன் தலைமையில் மூன்று DSP க்கள், ஏழு ஆய்வாளர்கள் தலைமையில் மொத்தம் 11 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதனிடையே, பிரேத பரிசோதனைக்காக சிறுமியின் உடல் திருச்சி அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டது. மருத்துவர்கள் கார்த்திகேயன், கனக ஸ்ரீ, பானுப்பிரியா ஆகியோர் பிரேத பரிசோதனை மேற்கொண்டனர். அதன் பின்னர், சிறுமியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. சிறுமியின் சொந்த ஊரான அதவத்தூர் -பாளையம் கிராமத்திற்கு காவல்துறை பாதுகாப்புடன் உடல் எடுத்து செல்லப்பட்டது. பின்னர் சிறுமியின் உடல் தகனம் செய்யப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00